Breaking News

புகார் அளிக்க வந்த பெண்ணின் 32 சவரன் நகையை மோசடி செய்த இன்ஸ்பெக்டர் கைது நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

புகார் அளிக்க வந்த பெண்ணின் 32 சவரன் நகையை மோசடி செய்த இன்ஸ்பெக்ட்டர் கைது நடந்தது என்ன முழு விவரம்

ராஜேஷ்குமார் என்பவருக்கும் உசிலம்பட்டியைச் சேர்ந்த அபிநயாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அபிநயா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்துள்ளார் திருமங்கலம் மகளிர் காவல் ஆய்வாளர் கீதாவிடம் தான் அணிந்து வந்த 102 சவரன் நகைகளை மீட்டு தரக் கோரி அபிநயா புகார் அளித்துள்ளார்

அபிநயா புகாரின்பேரில், ராஜேஷ் குமாரிடமிருந்து 102 சவரன் தங்க நகையை கடந்த ஏப்ரல் மாதமே கீதா கைப்பற்றி அபிநயாவிடம் நகைகளை கொடுக்காமல் அபிநயா நகையை கேட்கும்போதெல்லாம் ராஜேஷ் இன்னும் நகையைத் தரவில்லை என்றே சொல்லி ஏமாற்றி வந்துள்ளார் இன்ஸ்பெக்டர் கீதா.

இந்நிலையில் நகை விவகாரம் தொடர்பாக பெண் வீட்டார் ராஜேசிடம் கேட்க தான் நகைகளை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டதாக அபிநயா குடும்பத்தினரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த இரண்டு தரப்பினரும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் நகைகள் குறித்து கேட்டுள்ளார்கள் ஆனால் அவர் காலம் தாழ்த்தவே 

இது குறித்து ராஜேஷ் குமார் மதுரை டி.ஐ.ஜி ரம்யா பாரதியிடம் புகார் அளித்தார். டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, 70 சவரன் தங்க நகைகளை அபிநயாவிடம் ஆய்வாளர் கீதா ஒப்படைத்தார். எஞ்சிய 32 சவரன் தங்க நகைகளை ஒப்படைக்காமல் இருந்ததை அடுத்து ஆய்வாளர் கீதா கைது செய்யப்பட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback