Breaking News

அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை 3 நாட்களுக்குள் அகற்றனும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை 3 நாட்களுக்குள் அகற்றனும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் அடுத்த 3 தினங்களுக்குள் அகற்ற வேண்டும் என  சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது


இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப்பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீதிமன்ற வழக்கு தொடர்புடைய விளம்பரப் பலகைகள் மற்றும் உரிமம் பெறப்பட் பலகைகளை தவிர இதர அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை விளம்பர நிறுவனங்கள்/கட்டட உரிமையாளர்கள் அடுத்த 3 தினங்களுக்குள் அகற்றிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது


விளம்பரப் பலகையை நிறுவுவதற்கு முன்பு விளம்பர நிறுவனத்திடம், மாநகராட்சி பெறப்பட்டுள்ளதா என்பதை கட்டட உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறி நிறுவப்பட்ட விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்றிடுமாறும், தவறும்பட்சத்தில் உரிமையாளர்கள் மீது கட்டட அனுமதி சட்ட விதிகளின்படி சட்ட நடவடிக்கை தொடர அறிவுறுத்தப்படுகிறது.

விளம்பரப் பலகைகளை 3 தினங்களுக்குள் அகற்ற வேண்டும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனம் கடையின் பெயர்ப்பலகையினை தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 202 தெரிவித்துள்ளபடி நிறுவப்பட்டிருந்தால் உரிமம் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

மேலும், ஒரு பெயர்ப்பலகைக்கு மேல் வைக்க வேண்டுமானால் முறையாக அனுமதி பெற்று வைக்கப்பட வேண்டும். எனவே, கூடுதலாக பெயர்ப்பலகை வைத்துள்ள விளம்பர நிறுவனங்கள் 3 தினங்களுக்குள் அவற்றை அகற்றிட வேண்டும்.

மேற்கண்ட விளம்பர நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் விதிகளுக்கு மாறா விளம்பரப் பலகைகளை அகற்ற தவறும்பட்சத்தில் தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புககள் விதிகள் 2022 பிரிவு 177Oன்படி அபராதம் விதிப்பதுடன் அவ்விளம்பரப் பலகையானது கட்டுமானத்துடன் மாநகராட்சியால் அகற்றப்படும் எனவும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்தின் மீது காவல் வழக்கு பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback