Breaking News

இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான் 3 வது உலகபோர் தொடங்குமா முழு விவரம்

அட்மின் மீடியா
0

இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான் 3 வது உலகபோர் தொடங்குமா முழு விவரம் 



இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது இன்னும் நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்காக இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் புவாட் ஷுகர் கடந்த ஜூலை 30-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தார். இதற்காக இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. 

இந்த சூழலில் புவாட் ஷூகர் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் ராணுவம் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. 

இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வான்வழி தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' மற்றும் சி-டோம் அமைப்புகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. 

பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. லெபனானில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டினர் உடனே வெளியேறுமாறு பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இஸ்ரேல், லெபனான், ஈரானில் உள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்குமாறு இந்திய தூதரகங்கள் அறிவுறுத்தி உள்ளன.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback