Breaking News

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் காரணமாக 1ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதை ஒட்டி, நாளை முதல் வரும் 1ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது! 
 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான சென்னை ஃபார்முலா ரேசிங் " சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி 30.08.2024 முதல்  01.09.2024 வரை நடைபெறுகிறது.  இந்த நிகழ்ச்சி 30.08.2024 முதல் 01.09.2024 வரை மதியம் 12.00 மணி முதல் 2200 மணி வரை நடைபெற இருப்பதால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தெற்கிலிருந்து வரும் வாகனங்கள்

a) காமராஜர்சாலையில் 

போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை. சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்). ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம். 

b) மவுண்ட் ரோட்டில் 

வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். 

c) சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும். 

வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்

a) காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை. 

b) சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன்சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

c) முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம் 

கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்: தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட். பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12.00 மணி முதல் 22.00 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளன.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback