Breaking News

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து 41 பேர் உயரிழப்பு நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0
நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து 41 பேர் உயரிழப்பு நடந்தது என்ன முழு விவரம்



நேபாளத்தில் 43 இந்தியர்களுடன் சென்ற பேருந்து தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே அமைந்துள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்

விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீட்புப் பணியை முடுக்கிவிட்டது. இதில் ஆற்றில் விழுந்த 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 14 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக, மகாராஷ்டிர அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள்ளார். 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் சரியான எண்ணிக்கை தங்களிடம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய தூதரகம் அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1826961586839543886

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback