Breaking News

கோவை வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது கொலைக்கான காரணம் என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

கோவை வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது கொலைக்கான காரணம் என்ன முழு விவரம்

 


கோவை மாவட்டம், சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் உதயகுமார் (47) என்பவர் கோவையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 

நேற்று (02.08.2024) பகல் சுமார் 12 மணியளவில் செட்டிபாளையம் மயிலேரிபாளையம் அருகே மேற்படி உதயகுமாரை அடையாளம் தெரியாத சிலர் வெட்டி படுகொலை செய்ததாக உதயகுமாரது மனைவி நித்திலவள்ளி(47) செட்டிபாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருமதி.பவானீஸ்வரி, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், கோவை சரக காவல்துறை துணை தலைவர் திரு.சரவணசுந்தர், இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., மேற்பார்வையில், 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி கொலை செய்யப்பட்ட நபரது காரில் தப்பிச்சென்ற குற்றவாளிகளை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டும், சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டும், மேற்கொள்ளப்பட்ட தீவிர புலன்விசாரணையில் 

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த முருகன் மகன் அய்யனார் @செல்வம் (26)  பாண்டியராஜன் மகன் கௌதம் @விருமாண்டி (20) செந்தில்குமார் மகன் அருண்குமார் (26) மற்றும் செந்தில்குமார் மகன் அபிஷேக் (20)ஆகியோர்கள் சேர்ந்து மேற்படி உதயகுமாரை கொலை செய்தது தெரிய வந்தது. 

மேற்படி நபர்களை கைது செய்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட உதயகுமாருக்கும், அய்யனார்@செல்வம் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளதும், இதனால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  திட்டமிட்டு உதயகுமாரை சம்பவ இடத்திற்கு அவரது காரிலேயே அழைத்துச் சென்று வெட்டி கொலை செய்துள்ளனர். 

கொலை வழக்கில் ஈடுபட்ட மேற்படி நபர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback