Breaking News

பத்ரிநாத்தில் வழி தவறி காட்டில் சிக்கி கொண்ட 4 பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்திற்க்கு இடையே கயிறு கட்டி மீட்ட போலீசார் வீடியோ

அட்மின் மீடியா
0

பத்ரிநாத்திற்கு சென்ற பக்தர்கள் சரண் பாதுகாவில் வழி தவறிவிட்டனர். உத்தரகாண்ட் காவல்துறை SDRF குழுவினர், கடினமான மலைப்பாதையில் 3 கிலோமீட்டர்கள் மலையேற்றம் செய்து காட்டாற்றுக்கு இடையே கயிறு கட்டி பக்தர்களை மீட்டனர்.

உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டம் தாமில் உள்ள சரண் படுகாவில் நேற்றிரவு நான்கு சாதுக்கள் சிக்கியுள்ளனர் தகவல் அறிந்து பத்ரிநாத் சாமோலி போலீசார் மற்றும் எஸ்டிஆர்எஃப் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை மீட்டனர். அனைத்து சாதுக்களும் பத்ரிநாத் தாமுக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சுமார் 3 கிலோமீட்டர் அடர்ந்த காட்டுபகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்தனர்.ஆனால் அங்கே தீடீரென அதிகரித்த காட்டாற்று வெள்ளத்தில் கயிறு கட்டி  பாபா சர்வேஷ்வர், வயது 32, காம் சவுக்கில் வசிப்பவர். ஜிதேந்திர கிரி மகராஜ், வயது 38.சிவானந்த் சரஸ்வதி, வயது 31, படால் கங்கா லாஞ்சியில் வசிப்பவர்.பாபா ஹரிலால், வயது 82, காம் சவுக்கில் வசிப்பவர். என 4 சாதுக்களைபத்திரமாக மீட்டுள்ளனர்

போலீசார் மற்றும் எஸ்டிஆர்எஃப் படையினர் அவர்களை மீட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1821554820031144054

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback