Breaking News

கண் இமைக்கும் நேரத்தில் பைக்கில் இருந்த 5 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிய திருடன் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ Pune Couple’s Gold Worth ₹5 Lakh Stolen While Buying Vada Pav

அட்மின் மீடியா
0

கண் இமைக்கும் நேரத்தில் பைக்கில் இருந்த 5 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிய திருடன் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ Pune Couple’s Gold Worth ₹4.95 Lakh Stolen While Buying Vada Pav

In Pune, a couple’s gold jewellery valued at ₹4.95 lakh was stolen while they paused to buy vada pav after retrieving it from a bank. The theft occurred on Thursday outside Rohit Vadewale's shop in Shewalewadi

 


புனேவில் வங்கியில் அடகு வைத்த 4.95 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டுக்கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் பேரனுக்கு பாவ் பஜ்ஜி வாங்க சென்றபோது இருசக்கர வாகனத்தில் இருந்த பையை திருடிகொண்டு ஓடிய திருடன் சிசிடிவி வீடியோ வைரல்

புனேவில் உள்ள ஒயிட்ஃபீல்ட் சொசைட்டியில் வசிக்கும் 69 வயதான மஞ்சரி புத்ருக், என்பவர் தனது மனைவியுடன் பாரத ஸ்டேட் வங்கியின் உருளி காஞ்சன் கிளையில் அடமானமாக வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்டெடுக்கச் சென்றுள்ளார். 

நகைகடன் தொகையை கட்டி நகையை மீட்ட அந்த வயதான தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​வீட்டில் உள்ள பேரக்குழந்தைகளுக்காக  பாவ் பஜ்ஜி வாங்க ஷெவல்வாடி பகுதியில் உள்ள கடை முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு தனது மனைவியை பைக் அருகே நிற்க்க வைத்து விட்டு நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை பைக்கில் வைத்து விட்டு சென்றுள்ளார். 

இவர்களை நோட்டம் விட்டு கொண்டு இருந்த திருடன் மோட்டார் சைக்கிளில் இருந்த பையை திருடிச் சென்றார்

அங்கிருந்த பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு வருவதற்க்குள் திருடன் ஓடிவிட்டான் உடனடியாக போலீசில் புகார் செய்துள்ளனர் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வருகின்றார்கள்

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1829801232527212750

A couple lost their gold jewellery worth ₹4.9 lakh after a man picked up the bag containing the items and walked away. The incident took place when the Pune couple stopped at a shop to eat vada pav. A CCTV footage of the theft has gone viral and shocked people.

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback