Breaking News

வயநாடு காட்டில் சிக்கித்தவித்த மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை உயிரை பணயம் வைத்து வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்ட வீடியோ பார்க்க

அட்மின் மீடியா
0

வயநாடு காட்டில் சிக்கித்தவித்த மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை உயிரை பணயம் வைத்து வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்ட வீடியோ பார்க்க

 


வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அடர்ந்த வனப்பகுதியில் உணவு, குடிநீர் இன்றி தவித்துக்கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தைகள் உள்பட 6 பேரை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

அட்டமலை வனப்பகுதியில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என கல்பெட்டா வனத்துறை அதிகாரி ஆசிஃப் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

வயநாடு நிலச்சரிவில் அட்டமாலா வனப்பகுதியில் சிக்கித்தவித்த பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை 8 மணி நேரம் போராடி கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சாந்தி அவரது 3 குழந்தைகளை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்

இந்த சம்பவத்தின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.அவரது பதிவில், "இத்தகைய இருண்ட காலத்திலும் இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது என்பதை இவர்களின் வீரம் நமக்கு நினைவூட்டுகிறது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1819633453396381965

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback