Breaking News

சவுதி மன்னர் செய்த உதவியால் 610 கிலோ உடல் எடையை 68 கிலோவாக குறைத்த இளைஞர் முழு விவரம் Khalid bin Mohsen Shaari tamil

அட்மின் மீடியா
0
சவுதி மன்னர் செய்த உதவியால் 610  கிலோ உடல் எடையை 68 கிலோவாக குறைத்த இளைஞர்  முழு விவரம் Khalid bin Mohsen Shaari tamil

ஒரு காலத்தில் உலகின் மிக மிக பருமனான மனிதர் காலித் பின் மொசென் ஷாரி இவரது எடை 610 கிலோ ஆகும் இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் தனது உடல் எடையை 542 கிலோ குறைத்து, தற்போது 68 கிலோ எடையுடன் இருக்கிறார்.இவர் அதிக உடல் எடை காரணமாக எங்கும் செல்லாமல்  சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்த ஷாரியில் நிலையை பற்றி அறிந்த சவூதி நாட்டின் முன்னாள் மன்னர் அப்துல்லாஹ் தலையீட்டால் எந்த செலவின்றி விரிவான மருத்துவ சிகிச்சையைப் பெற்றார்.காலித் பின் மொஹ்சென் ஷாரி



அவருடைய உடல் எடையை குறைக்க சவுதி மன்னர் ஒரு விரிவான மருத்துவ திட்டத்தை ஏற்பாடு செய்தார் இந்தத் திட்டத்தில் ஷாரிக்கா 30 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு இருந்தது. ஃபோர்க்லிஃப்ட் மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட படுக்கையைப் பயன்படுத்தி, ஷாரி முழு சிகிச்சைக்காக ஜசானில் உள்ள அவரது வீட்டிலிருந்து விமானம் மூலம் ரியாத்தில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திட்டத்தில் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை, பொருத்தமான உணவுமுறை மற்றும் கடுமையான உடற்பயிற்சி முறை ஆகியவை அடங்கும். சிகிச்சை செய்த மருத்துவக் குழுவின் தீவிரமான பராமரிப்பு மற்றும் உடல்தகுதி சிகிச்சை ஷாரியின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்தது.

அவரது நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில், மருத்துவ குழுவினர் அவரை "சிரிக்கும் மனிதர்" என்று அழைகின்றனர்.

Khalid bin Mohsen Shaari, world's heaviest man Weight loss

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback