Breaking News

பிரேசில் பயணிகள் விமானம் விபத்து 62 பேர் உயிரிழப்பு - நடுவானில் விமானம் வெடித்து கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ brazil plane crash video

அட்மின் மீடியா
0

பிரேசில் பயணிகள் விமானம் விபத்து 62 பேர் உயிரிழப்பு - நடுவானில் விமானம் வெடித்து கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ brazil plane crash video



பரானா மாகாணத்தில் உள்ள கேஸ்கேவலில் இருந்து கேரோலியோஸ்-ல் உள்ள சாவ் பாலோ சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ATR 72-500 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது! விமானத்தில் 57 பயணிகள் உட்பட 4 விமான நிறுவன ஊழியர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல். விமானம் வானில் வட்டமடித்தபடி கீழே விழும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகின்றது.

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் பயணிகள் விமானம் 57 பயணிகள் ஏற்றி கொண்டு 4 ஊழியர்களுடன் பறந்து சென்று கொண்டிருந்தது. வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்து . விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுகிறது. பின்னர் வின்ஹெடோ நகரில் உள்ள வீடுகளின் மீது தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது. இதில் சில நொடிகளில் விமானத்தின் ஒரு பெரிய பகுதியில் தீப்பிடித்து எரிகிறது. பின்னர் விமானத்தில் இருந்து பெரிய கரும்புகை வானத்தை நோக்கி வெளியேறுவதாக உள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன என்று அறிக்கையில் கூறவில்லை.. விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

விமான விபத்து வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1822120822708015151

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback