Breaking News

ஐதராபாத்தில் வெறும் 6 அடி தூரம் மட்டுமே பெய்த மழை வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0
ஐதராபாத்தில் வெறும் 6 அடி தூரம் மட்டுமே பெய்த மழை வைரல் வீடியோ

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பெய்து வ்ரும் நிலையில்  தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் முரட் நகரில் போஸ்ட் ஆஃபிஸ் லைன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை திடீரென மழை பெய்தது. 

ஆனால் அந்த மழை வித்தியாசமாக வெறும் 6 அடி அளவுக்கே மழை பெய்தது.வித்தியாசமான இந்த நிகழ்வை பொதுமக்கள் 6 அடிக்கு அப்புறமும், இப்புறமுமாக நின்று வியப்புடன் ரசித்தனர். 



குறிப்பிட்ட சில அடி தூரம் மட்டும் மழை பொழியும் வகையிலான மேகங்களை அத்தனை எளிதில் கணித்து சொல்ல முடியாது எனவும், ராடார் கருவிகளில் இது பதிவாகாது எனவும் வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வைரல் வீடியோவில் ஒரு தெருவில் 6 அடி பகுதியில் மழை பெய்வதைக் காட்டுகிறது, அங்கு நின்றவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் மழைக்காக காத்திருக்கிறார்கள், 

இந்த அரிய வானிலை நிகழ்வு 'அல்ட்ரா-உள்ளூர் மழைப்பொழிவு,' மிகச்சிறிய புவியியல் பகுதியில், சில சமயங்களில் சில அடி அகலத்தில் தீவிர மழை பெய்யும் போது நிகழ்கிறது. இந்த மழை பொதுவாக குறுகியதாக இருக்கும் ஆனால் மிகவும் கனமாக இருக்கும். அவற்றின் வரையறுக்கப்பட்ட வரம்பு காரணமாக, இத்தகைய மைக்ரோ மழைகள் பெரும்பாலும் நிலையான வானிலை முன்னறிவிப்புகளால் கண்டறியப்படுவதில்லை என கூறப்படுகின்றது


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1827552571642552521

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback