விருதுநகர் மாவட்டத்திற்க்கு 7-ந் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்திற்க்கு 7-ந் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில்:-
ஆடிப்பூரத் திருவிழாவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மற்றும் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் பிரச்சித்திப் பெற்ற பிரார்த்தனை திருத்தலமாக விளங்கி வருகிறது. இந்த திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்
இத்திருவிழா 30.07.2024 முதல் 07.08.2024 வரை நடைபெறுகிறது. அதில் 07.08.2024 (புதன் கிழமை) அன்று திருத்தேரோட்டம் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் 07.08.2024 (புதன் கிழமை) அன்று விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
அன்று பள்ளி கல்லூரிகள் அலுவலகங்கள் இயங்காது. அதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் மாதத்தின் 3 வது சனிக்கிழமையான 17.08.2024 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்