Breaking News

சென்னையில் 75 இடங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்கள்: சன் மொபிலிட்டி நிறுவனம் அறிவிப்பு sun mobility BATTERY SWAPPING

அட்மின் மீடியா
0

சென்னையில் 75 இடங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்கள்: சன் மொபிலிட்டி நிறுவனம் அறிவிப்பு

 

சென்னையில் 75 இடங்களில் மின்சார வாகன பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்களை சன் மொபிலிட்டி நிறுவனம் அமைக்கிறது. 

ஸ்வாப்பிங் நிலையங்கள் தொடர்பாக சன் மொபிலிட்டி நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது.

தமிழகத்தில் தற்போது மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்கள். மத்திய அரசும் மின்சார வாகனங்கள் வாங்க மானியமும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் பெட்ரோல்-டீசல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதை போலவே மின்சார வாகனங்களுக்கும் நிலையங்கள் அமைக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மின்சார வாகனத்திற்கு BATTERY SWAPPING நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து, தற்போது E- வாகனங்களுக்காக, சென்னையில் 75 இடங்களில் BATTERY SWAPPING- நிலையங்களை சன் மொபிலிட்டி நிறுவனம் அமைக்கப்போவதாக மக்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback