Breaking News

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு செயலி மூலம் ரூ. 75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறலாம் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு செயலி மூலம் ரூ. 75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறலாம் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ

 


கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் இணையவழியில் கடன் பெற விண்ணப்பிக்கும் வசதியுடன் கூடிய 'கூட்டுறவு' என்ற செயலியை கூட்டுறவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது


கடன் வகைகள்:-

பயிர் கடன், 

மீன் வளர்ப்பு கடன், 

கால் நடை வளர்ப்பு கடன், 

அடமானக் கடன்,

குறுகிய கால கடன், 

நகைக் கடன், 

தனிநபர் கடன், 

ஓய்வூ தியர் கடன், 

வீட்டுக் கடன், 

மகளிர் தொழில் முனைவோர் கடன்,

எம்.எஸ்.எம்.இ. கடன், 

வேலைசெய் யும் பெண்களுக்கான கடன், 

மாற்றுத்திறனாளிகள் கடன், 

சில்லரை வணிகக் கடன், 

சுயஉதவிக்குழு கடன், 

தாட்கோ கடன், 

மனை வாங்கும் கடன்,

கல்விக் கடன், 

வாகனக் கடன், 

மூத்த குடிமக்களுக்கான அடமானக் கடன் 

உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றது

மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் நகை மதிப்பில் 75 சதவீதம் வரை கிராமுக்கு ரூ.5000 வரை நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான வட்டிவிகிதம் 9 முதல் 10.50 சதவீதம் ஆகும். தனிநபர் ஒருவருக்கு ரூ.30 லட்சம் வரை நகைக்கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தொடர்ந்து நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் 12 சதவீத வட்டி விகிதத்தில் வாகன கடன் வழங்கப்பட்டு வருகிறது.

 விண்ணப்பிப்பது எப்படி:-

கூகுள் பிளே ஸ்டோருக்குள் நுழைந்து, 'கூட்டுறவு' ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.

அதன்பின்பு அதில் வங்கி சேவை" என்பதை தேர்வு செய்ய வேண்டும்

அதில் "கடன் தகவல்" என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

அடுத்து அதில் உள்ள கடன் பட்டியலில் கடன்களுக்கான உச்சவரம்பு, கடன் கால அளவு, வட்டி வீதம், கடனுக்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில், அதிகபட்சமாக வீட்டுக் கடனுக்கு ரூ.75 லட்சம் வழங்கப்படுகிறது. 

அதில் வீட்டுக்கடன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.வீட்டுக்கடன் தேர்வு செய்யப்பட்டதுமே, கூட்டுறவு சங்கம் தொடர்பான விவரங்கள் (அதாவது மாவட்டம், வட்டம், சங்கம்), வங்கி விவரங்கள், தனிநபர், விவரங்கள், முகவரி, முந்தைய கடன் விவரங்கள் போன்றவற்றை பதிவு செய்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback