Breaking News

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி வைரல் வீடியோ

இமாச்சல் மாநிலத்தில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக பஞ்சாப்க்கு இன்னோவா காரில் சென்ற 7 பேர் மேகத்பூர் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் 7பேர் பலி ஒருவர் உயிருடன் மீட்பு  வைரல் வீடியோ



இமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டம் டாரா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பஞ்சாப் மாநிலம் பகத்சிங் நகர் மாவட்டம் மஹ்ரோவால் கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றுள்ளனர்.

பஞ்சாப்பின் மேகத்பூர் அருகே வனப்பகுதியில் ஆற்றோரம் இன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. 

இச்சம்பவத்தில் கார் டிரைவர், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் அடித்து செல்லப்பட்டனர்.வெள்ளத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராமத்தினர் ஒருநபரை உயிருடன் மீட்டனர். 

ஆனாலும், இச்சம்பவத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய 3 பேரை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1822847928802955314

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback