Breaking News

வங்கதேசத்தில் சிதறிக் கிடக்கும் உடல் என்று பரவும் வீடியோ உண்மை என்ன bangladesh dead bodies fake video

அட்மின் மீடியா
0
வங்கதேசத்தில் சிதறிக் கிடக்கும் இந்துக்களின் என்று பரவும் வீடியோ உண்மை என்ன


பரவிய செய்தி:-

பங்களாதேஷில் கிராமங்களில் சிதறிக் கிடக்கும், யாருக்கும் ஒரு தீங்கும் விளைவிக்காத இந்துக்களின் உடல்களைப் பாருங்கள். 1921-ல் நம் நாட்டின் துரோகிகளான முஸ்லிம் தீவிரவாதிகள் கேரளத்தில் நடத்திய மாப்பிளா கலவர கொலைகளை காணாதவர்கள் இந்த வீடியோவில் நேரடியாக காணலாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது

உண்மை என்ன:-

அந்த வீடியோ சம்பவம் வங்க தேசத்தில் நடந்தது இல்லை

மியான்மர் நாட்டில் நடந்த துயர சம்பவம் அது

வங்கதேசத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீது நடத்த பட்ட ட்ரோன் தாக்குதல் ஆகும்  அதில் இறந்து கிடப்பவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள்

கடந்த 05.08.2024 அன்று ரோஹிங்கியா மக்கள் மீது  போராளிகள் குழு ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் என ரோஹிங்கியா மனித உரிமை செய்தியும் வீடியோவ்ம் வெளியிட்டு இருந்தது

மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வீடியோவை எடுத்து, வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்பட்டதாக பொய்யாக பரப்புகின்றார்கள்

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்


https://x.com/ROHRIngya/status/1820907423462519101


உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback