Breaking News

மோடியையும் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசியதால் முத்தலாக் செய்த கணவர் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

மோடியையும் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசியதால் முத்தலாக் செய்த கணவர் நடந்தது என்ன முழு விவரம் 

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மரியம், இவர் அர்ஷத் என்பவருடன் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டுள்ளார். 

இவருக்கு தனது கணவரின் ஊரான அயோத்தி மாநிலம்  யோகி ஆதித்யநாத் முதல்வர் ஆன பின்பு நன்கு வளர்ச்சியடைந்துள்ளது எனவும் தனக்கு மோடியும், முதல்வர் யோகியும் பிடிக்கும் என தனது கனவரிடம் கூறியுள்ளார்.  இதனால், கோபமுற்ற அவரது கணவர், மரியத்துடன் சண்டையிட்டு அவரை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். 


இதையடுத்து, பெரியவர்கள் அவரை சமாதானம் செய்துவைத்து, மீண்டும் அர்ஷத்தின் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஆனால், மீண்டும் பிரதமரையும், முதல்வரையும் புகழ்ந்து மரியம் பேசியதால் கடும் கோபத்தில் இருந்த அர்ஷத் அவரை அடித்து உதைத்ததாகவும், கொதிக்கும் சாம்பாரை அவரது மேல் ஊற்றி மரியத்திடம் 'தலாக்' என்று மூன்று முறை கூறி வீட்டை விட்டு அனுப்பியுள்ளார்கள், மேலும் அர்ஷத்தின் குடும்பத்தினரும் மரியத்தின் கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார்கள்

உடனடியாக தனது பெற்றோர் வீட்டிற்க்கு சென்ற மரியம் நடந்ததை கூறியுள்ளார் மேலும் மரியம் பஹ்ரைச் நகர காவல் துறையினரிடம் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் பெண்ணின் கணவன் அர்ஷத், மாமியார் ரைஷா, மாமனார் இஸ்லாம், உறவினர் குல்சும் உள்பட 8 பேர் மீது வரதட்சணை தடுப்பு சட்டம் மற்றும் இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 இது தொடர்பாக மரியம் வெளியிட்டுள்ள வீடியோவில்,

அயோத்தியை பார்த்த பிறகு, என் கணவர் முகமது அர்ஷத் முன் யோகி, மோடியை புகழ்ந்தேன், அதற்க்கு எனது கணவர் கோபத்தில் என் முகத்தை எரித்தார் - மரியம்" விவாகரத்து சட்டத்தை இயற்றியதன் மூலம் பெண்களின் மனதை இன்னும் கெடுத்து விட்டார் மோடி, என்று கூறிய அர்ஷத், தலாக்-தலாக்-தலாக் என்று கூறி அவளை வீட்டை விட்டு வெளியேற்றினார்கள் என கூறியிள்ளார்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback