Breaking News

ஆந்திராவில் குப்பைக்கு வரி வசூல் செய்ய உத்தரவிட்ட மேயரை கண்டித்து வீட்டின் முன்பு குப்பைகளை வீசிய தெலுங்கு தேசம் கட்சியினர் வீடியோ

அட்மின் மீடியா
0
ஆந்திராவில் குப்பைக்கு வரி வசூல் செய்ய உத்தரவிட்ட மேயரை கண்டித்து வீட்டின் முன்பு குப்பைகளை வீசிய தெலுங்கு தேசம் கட்சியினர் வீடியோ

ஆந்திரா கடப்பாவில் குப்பைகளை சேகரிக்க மாதத்திற்கு ரூ.60 வரி விதிக்கப்பட்டது. வரி கட்டாவிட்டால் குப்பைகளை சேகரிக்க மாட்டோம் என மேயர் சுரேஷ்பாபு கூறியதை அடுத்து மேயர் வீட்டின் முன்பு குப்பைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு தேசம் கட்சியினர்.




ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் குப்பைகளை சேகரிக்க மாதத்திற்கு வீடு வீடாக ரூ.60 வரி விதிக்கப்பட்டது. அதை ரத்து செய்வதாக தேசிய கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்தன. 

அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சந்திரபாபு நாயுடு அரசு கடந்த மூன்று மாதங்களாக குப்பைக்கு வரி வசூல் செய்யவில்லை.

இதற்கிடையே வரி கட்டாவிட்டால் குப்பைகளை சேகரிக்க மாட்டோம் என மேயர் சுரேஷ்பாபு எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே நேற்று தெலுங்கு தேசம் கட்சியினர் மேயர் சுரேஷ்பாபு வீட்டின் முன்பு குப்பைகளுடன் சென்று வீட்டின் முன்பு குப்பைகளை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து மேயர் ஆதரவாளர்கள் சின்னசவுக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் கடப்பா மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1828624640002212134

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback