Breaking News

வேகமாக பரவும் குரங்கம்மை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0
வேகமாக பரவும் குரங்கம்மை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு முழு விவரம்

ஆப்பிரிக்க நாடுகளில் monkey pox virus எனப்படும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளதுகாங்கோ நாட்டில் ஏற்பட்ட வைரஸ் தொற்று அண்டை நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாகmonkey pox virus உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுள்ளது

ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய்ப் பரவலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆப்பிரிக்க ஒன்றிய சுகாதார கண்காணிப்பு அமைப்பு, சி.டி.சி வலியுறுத்தியுள்ளது.


ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். அதனால், இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.

நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றில் காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டு உள்ளன.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விசயம். இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்

குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.

குரங்கு அம்மை என்றால் என்ன:-

குரங்கு அம்மை Monkeypox  என்னும் தொற்றுநோய். இந்நோய் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடலில் தசை வலி, நெறிகட்டுதல், களைப்பாக உணர்தல் போன்றவையாகும்.இதனைத்தொடர்ந்து கொப்புளம், தடிப்புகள் போன்றவை தோன்றலாம். அதன்பின் பல்வேறு கட்டங்களாக உருவெடுத்து சிரங்கு உண்டாகும். அதன்பின் அது மறைந்துவிடும். 

ஆனால் கொப்பளங்கள் தழும்பை ஏற்படுத்தலாம்.பொதுவாக இந்த தொற்று 14 - 21 நாட்களில் தானாக சரியாகிவிடும்.எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். 

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback