Breaking News

செவித்திறன் பாதிக்கப்பட்ட / பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
செவித்திறன் பாதிக்கப்பட்ட / பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


இது தொடர்பாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென் சென்னை எல்லைக்குட்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட / பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன்கள் கல்வி பயில்பவர்கள். பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யும் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படவுள்ளது.

தகுதிகள் என்ன:-

1.செவித்திறன் பாதிக்கப்பட்ட / பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட 80% 100% உள்ள மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

2. இளநிலை பட்ட படிப்பு மற்றும் முதுநிலைபட்டபடிப்பு பயிலும், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பகலாம்.

3. 18 வயது பூர்த்தி அடைந்த பட்டயபடிப்பு /polytechnic ITI பயிற்சி பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4.மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து அரசு ஊதியம் பெறும் மாற்றுத்திறனாளியாக இருத்தல் கூடாது.

5. அதிகபட்ச வயது வரம்பு 70 ஆகும்.

எனவே, தென் சென்னையை சார்ந்த மேற்காணும் தகுதிகள் உடைய மாற்றுத்திறனாளிகள் 19.08.2024 க்குள் இ-சேவை மையம் வாயிலாக https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு சென்னமாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Smart phones education students under the scheme to provide smart phones to hearing impaired / visually impaired persons above 18 years of age within South Chennai limits. Interviews will be conducted for employed and self-employed persons with disabilities and selected beneficiaries will be provided with smart phones.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
 
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/08/2024081253.pdf

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback