வயநாடு நிலச்சரிவுக்கு முன் நிலச்சரிவுக்கு பின் செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ! முழு விவரம்
வயநாடு மாவட்ட மலைப்பகுதியில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கி, 291 பேர் உயிரிழந்தனர். ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறங்கி மண்ணில் புதைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) இஸ்ரோவின் மேம்பட்ட கார்டோசாட்-3 ஆப்டிகல் செயற்கைக்கோளையும், மேகத்தை ஊடுருவிச் செல்லும் ரிசாட் செயற்கைக்கோளையும் பயன்படுத்தி இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது
நிலச்சரிவுகளால் சுமார் 86 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்பும், இருவைப்புழா ஆற்றின் குறுக்கே 8 கிலோமீட்டர் தூரத்திற்கும் இடிபாடுகளும், பாதிப்புகளும் இருப்பதை அந்த புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.
அதன்படி, சுமார் 86,000 சதுர மீட்டர் நிலம் இடிந்து விழுந்தது ஆற்றின் குறுக்கே ஏறக்குறைய 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலம் தண்ணீரில் மூழ்கி,மூன்று கிராமங்களுக்கு விரிவான அழிவை ஏற்படுத்தியது.
சூரல்மலை பகுதியிலும் அதனை சுற்றிலும் பெய்த கனமழையின் காரணமாகவே தொடர் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக செயற்கைகோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.
கனமழையால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, 1,550 மீட்டர் உயரத்தில் உருவானதாக செயற்கைகோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவினால் ஏற்பட்ட சிதிலங்கள் அனைத்தும் இருவைப்புழா ஆற்றின் போக்கையே விரிவுப்படுத்தியிருப்பதையும் அந்த புகைப்படங்கள் காட்டுகின்றது
மேலும் இஸ்ரோ கடந்தாடு வயநாடு உள்பட 147 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டு நிலச்சரிவு அபாயம் உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
மேலும் 147 மாவட்டங்களில் கோவை 36வது இடத்திலும், திண்டுக்கல் 41வது இடத்திலும் உள்ளன
இஸ்ரோ வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் தகவல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1819006892082913466
இஸ்ரோ வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் தகவல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.nrsc.gov.in/sites/default/files/pdf/DMSP/Charter_1029_VAP_2_31july2024.pdf
இஸ்ரோ வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் தகவல் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.nrsc.gov.in/sites/default/files/pdf/DMSP/Charter_1029_VAP_3_31july2024.pdf
Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி வைரல் வீடியோ