வயநாடு நிலச்சரிவு : தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தீவிரம்
நிலச்சரிவால் மண்ணில் புதைந்தவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் தெர்மல் ஸ்கேனர் காட்டிக் கொடுக்கும்.இந்த தொழில்னுட்பம் வைத்து தேடும் பணி தீவீரமடைந்துள்ளது
மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்று வந்த நிலையில், தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு பகுதி மீட்புப்படையினர் ஆங்காங்கே அங்குலம் அங்குலமாக மண்ணை தோண்டி இறந்தவர்களின் உடல்களை கண்டெடுத்து வருகின்றனர்.மறுபுறம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இறந்தவர்களின் உடல்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தெர்மல் ஸ்கேனர் மூலமாக மண்ணுக்கு அடியில் இரண்டு மீட்டர் ஆழத்தில் உடல் இருந்தாலும் அதனை கண்டுபிடிக்க முடியும் என கூறப்படுகிறது. அது மட்டுமின்றி அனைத்து பகுதிகளும் சேறாகவும், நீராகவும் இருப்பதால், அந்த இடங்களில் உடல் புதைந்திருந்தால் அதனை தெர்மல் ஸ்கேனர் எளிதாக அடையாளம் கண்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள்