Breaking News

வக்பு வாரிய திருத்தச்சட்டத்துக்கு பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் எதிர்ப்பு - அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரிய தலைவர் தகவல்

அட்மின் மீடியா
0
வக்பு வாரிய திருத்தச்சட்டத்துக்கு பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் எதிர்ப்பு - அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரிய தலைவர் தகவல்



வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு பீகார் முதல்வரும், ஐஜத கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் எதிர்ப்பு.



தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) முக்கிய அங்கம் வகிக்கும் ஜனதா தளம் (யுனைடெட்) [ஜேடி(யு)] மற்றும் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி)  இம்மசோதாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்த நிலையில், இச்சட்டத் திருத்தம் குறித்து முஸ்லிம்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறி தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர் என அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் செய்தியாளர் கூட்டத்தில், AIMPLB தலைவர் காலித் சைபுல்லா ரஹ்மானி, தெரிவித்துள்ளார்

இது குறித்து பேசிய அவர்

நாங்கள் பல அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தியுள்ளோம். முன்னதாக சந்திரபாபு நாயுடுவை சந்தித்தோம், இந்த மசோதாவை நாங்கள் கண்டிப்பாக எதிர்ப்போம் என்றார், 

அதேபோல் நேற்று நிதிஷ்குமாரை சந்தித்தோம், அவரும் எங்களுக்கு மசோதாவை எதிர்ப்போம் என உறுதியளித்தார், 

மேலும் நாங்கள் தேஜஸ்வி யாதவையும் சந்தித்தோம், அவர்கள் மசோதாவை எதிர்ப்போம் என்றார். 

மேலும் வக்ஃப் சட்டத்தில் கைவைக்க விடமாட்டோம் என்று உத்தவ் தாக்கரே அறிக்கை விடுத்துள்ளார்

இதேபோல் தமிழக முதல்வரிடமும் ஒரு அறிக்கை வந்துள்ளது. மற்ற மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்ப்பதாக எங்களிடம் உறுதியளித்துள்ளன, ரஹ்மானி பதிலளித்தார்.

மேலும் பிஜேபியின் கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களையும் நாங்கள் சந்தித்துள்ளோம். ஏனெனில் இது இந்து-முஸ்லிம் பிரச்சினை அல்ல. பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் மதச்சார்பின்மைக்காக செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அர்ஷத் மதனி (ஜமாத் உலமா-இ-ஹிந்த் மற்றும் துணைத் தலைவர், AIMPLB), சையத் சதாதுல்லா (அமீர், ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த்), அஸ்கர் அலி இமாம் மெஹ்தி சல்பி (அமீர், மார்கழி ஜமாத் அஹ்லே ஹாதி) ஆகியோரும் பங்கேற்றனர். ), முகமது ஃபஸ்லுர் ரஹீம் முஜாதிதி (பொதுச் செயலாளர், AIMPLB), மற்றும் SQR இல்யாஸ் (செய்தித் தொடர்பாளர், AIMPLB).உடன் இருந்தனர்

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback