Breaking News

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 2024-ல் நடைபெறவுள்ளதால் இணையதள முன்பதிவு (online registration) செய்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம். 

 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, 

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி "தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை" விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான இணையதள (online registration) 04.08.2024 ( https://sdal.tn.gov.in இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

முன்பதிவு செய்திட கடைசி நாள் 25.08.2024. 

மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 10 முதல் துவங்கப்படவுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், மாற்றுத்திறனாளிகள். பொதுப் பிரிவு மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய அனைத்து பிரிவினரும் உடனடியாக இணையதளத்தில் முன்பதிவினை விரைந்து செய்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாணாக்கர்கள் தாங்களாகவோ. தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். "ஆடுகளம்" தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback