Breaking News

இந்திய பத்திரிகையாளர்கள் வங்கதேசம் வந்து களத்தில் இருந்து செய்திகளை வெளியிட வேண்டும் - வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இந்திய பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தல்

அட்மின் மீடியா
0
இந்திய பத்திரிகையாளர்கள் வங்கதேசம் வந்து களத்தில் இருந்து செய்திகளை வெளியிட வேண்டும் - வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இந்திய பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தல்




வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற பின் தற்போது பிரதமா் மோடியை தொலைபேசியில் தொடா்புகொண்டு முதல்முறையாக இருவரும் உரையாடியுள்ளனா்.


பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், வங்கதேச இடைக்கால ஆட்சியாளர் முஹம்மது யூனுஸிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தற்போது வங்க தேசத்தில் நிலவும் சூழ்நிலை குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார். நிலையான ஜனநாயகம், அமைதியான மற்றும் முற்போக்கான வங்காளதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. வங்கதேசத்தில் இருக்கும் இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில் 

இந்திய பத்திரிகையாளர்கள் வங்கதேசத்திற்கு வந்து களத்தில் இருந்து செய்திகளை வெளியிட வேண்டும் - முகமது யூனுஸ் அறிவுறுத்தியுள்ளார்

வங்கதேச சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்த செய்திகளை இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன.

சிறுபான்மையினரின் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த செய்திகள் களத்தில் இருந்து வெளியிடப்பட வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இந்திய பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback