Breaking News

லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பு வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது சுமார் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்! முழு விவரம்

ஹமாஸ் அமைப்பின் தளபதியை இஸ்ரேல் ராணுவம் கொன்ற நிலையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் போரானது நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை பாலஸ்தீனர்களின் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,000-த்தை கடந்தள்ளது




இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டுள்ளார். ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த போது அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்கி இருக்கின்றனர்.இதன் விளைவாக அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இதனால், தஹ்ரானில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த தகவலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை உறுதிப்படுத்தி உள்ளதாக ஈரான் நாட்டு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் ஹைட்ஸ் என்ற பகுதியில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலியானார்கள்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் எல்லையில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷூகர் கொல்லப்பட்டார். 

இந்நிலையில் மீண்டும் பதிலடியில் இறங்கியுள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது பல ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 5 ராக்கெட்டுகள் மட்டுமே இஸ்ரேல் எல்லைக்குள் தாக்கியதாகவும், ஆனால் அதனால் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உடனே வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

.இது குறித்து இந்திய தூதரகம் தனது சமூக வலைதள பக்கத்தில் ’லெபனான் பிராந்தியத்தில் தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் ஏற்கனவே லெபனானில் உள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/orielishamiller/status/1819087173477716434

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback