திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு அறிவிப்பு!
திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு அறிவிப்பு!
நெல்லை மாநகராட்சி மேயராக தி.மு.க-வை சேர்ந்த பி.எம்.சரவணன் உள்ளார். அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்தே ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்தது.அதனால் அவரை மாற்ற வேண்டும் என்று பலமுறை கட்சித் தலைமைக்கு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்ததுடன், மாநகராட்சி கூட்டங்களிலேயே மேயருக்கு எதிராக பேசி வந்தனர்.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் மீது திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு அறிவிக்கப்பட்டுள்ளார்
நெல்லை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிட்டு, நெல்லை மாநகராட்சியின் 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆவார்.
மேலும், இவர் 1980 முதல் திமுக உறுப்பினராகவும், 3வது முறை கவுன்சிலராகவும் உள்ளார். அதேநேரம், 5 முறை திமுக வட்டச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: அரசியல் செய்திகள்