Breaking News

உபியில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முஸ்லீம் வீடு வாங்கியதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0
உபியில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முஸ்லீம் வீடு வாங்கியதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது என்ன முழு விவரம்

உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் உள்ள வக்கிலோன் வாலி காலி பகுதியில் இஸ்லாமிய பெண் ஒருவர் வீடு வாங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அப்பகுதி இந்துக் குடும்பங்கள். இந்த வீட்டை மீண்டும் இந்துக்களின் குடும்பத்திற்கே விற்க வேண்டும் என அவரவர் வீடுகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வக்கீல் வாலி கலி என அழைக்கப்படும் பஞ்சாப் புரா பகுதியில் பூ வியாபரம் செய்யும் முஸ்லிம் பெண் ஒருவர் வீடு வாங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்பகுதியில் வசிக்கும் விஷால் சக்சேனா ஷப்னம் என்ற முஸ்லிம் பெண்ணுக்கு தனது வீட்டை விற்றுள்ளார் இதனாலங்கு போராட்டம் தொடங்கியுள்ளது

இந்த பகுதியில் பல வழக்கறிஞர்கள் வீடுகள் உள்ளன. முஸ்லிம் பெண்ணின் சொத்துப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பஞ்சாப் புராவில் வசிக்கும் சில இந்துக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் மொத்தமாக வீட்டை காலி செய்து செல்வதாக மிரட்டி தங்கள் வீடுகளின் கதவுகளில் 'வெகுஜன இடம்பெயர்வு' அறிவிக்கும் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர். 

அருகிலுள்ள தர்காவில் பூக்கள் விற்கும் ஷப்னமின் சகோதரர் முகமது நசீம் பஷிரி  முன்பே சொல்லியிருந்தால், இந்த வீட்டை அவர்கள் வாங்குவதற்காக விட்டுச் சென்றிருப்போம். மேலும், இந்த வீட்டை வாங்குவதில் எங்களுக்கு எந்த தவறான எண்ணமும் இல்லை என்றும், எங்களுக்கு தீர்வு வேண்டும் என்றும் கூறியுள்ளார்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

 

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback