வங்கதேசத்தில் கோவில்கள் மீது தாக்குதலை தடுக்க கோவில் முன்பு இரவெல்லாம் காவல் காத்த இஸ்லாமியர்கள் வீடியோ இணைப்பு
வங்கதேசத்தில் கோவில்கள் மீது தாக்குதலை தடுக்க கோவில் முன்பு இரவெல்லாம் காவல் காத்த இஸ்லாமியர்கள் வீடியோ இணைப்பு
தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களை போராட்டகாரர்களிடம் இருந்து காக்கவேண்டும் என பள்ளிவாசல்களில் உள்ள ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது அந்த அறிவிப்பில்:-
பங்களாதேஷில் உள்ள மசூதிக்குள் இருந்து ஒலிபெருக்கியில் ஒரு சிறப்பு அறிவிப்பு."அன்புள்ள குடிமக்களே,நாட்டில் அமைதியின்மை நிலவும் இந்த காலகட்டத்தில், நாம் அனைவரும் மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்று 'பாகுபாட்டிற்கு எதிரான மாணவர்கள்' நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்து சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும். தீய சக்திகளிடமிருந்து அவர்களின் உயிரையும் செல்வத்தையும் பாதுகாக்கவும். இது உங்கள் பொறுப்பு, எங்கள் பொறுப்பு மற்றும் அனைவரின் பொறுப்பு. அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது
அதனை தொடர்ந்து தங்கள் பகுதிகளில் உள்ள கோவிலை தாக்குதலில் இருந்து காக்க இரவு நேரத்தில் இஸ்லாமியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்து கோவில்கள், கலாசார மையங்கள் உள்பட பிற சிறுபான்மை வழிபாட்டு தலங்களில் மாணவர்கள் இரவு நேரத்தில் கண்விழித்து காவல் காத்து வருகின்றனர்.
அந்த வகையில் குமில்லாவில் உள்ள இந்து கோவிலை முஸ்லீம் மதகுருமார்கள் தாமாக முன்வந்து பாதுகாத்தனர். கோவில் முன்பு சேர் போட்டு அமர்ந்து அவர்கள் இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் உபாசிலா என்ற இடத்தில் உள்ள கோவிலை இஸ்லாமிய சத்ர ஷிபிரின் மாணவர் பிரிவினர் பாதுகாத்து வருகின்றனர். இந்த முயற்சி தற்போது அனைவரிடமும் பாராட்டு பெற்று வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1820801922351485284
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ