Breaking News

ஹிஜாப் தடை வழக்கில் பொட்டு வைக்க தடை விதிப்பீர்களா?தனியார் கல்லூரிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி முழு விவரம்

அட்மின் மீடியா
0
மும்பை கல்லூரியில் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்ட வழக்கில்  உச்சநீதிமன்றம் கேள்வி


மும்பையைச் சேர்ந்த என்ஜி ஆச்சார்யா மற்றும் டிகே மராத்தகா கல்லூரி மாணவ - மாணவிகள் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் ஆடைகள் அணிவதற்கு கடந்த மே மாதம் தடை விதித்தது. இதன்படி, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா உள்ளிட்ட ஆடைகளை கல்லூரிக்குள் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. 

இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் மாணவ - மாணவிகள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மத ஆடைகளுக்கு கல்லூரி தடை விதித்துள்ளது. மாணவிகளின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இதைக் கருத முடியாது” என்று கல்லூரிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி வழக்கை தள்ளுபடி செய்தது. 

இதனை எதிர்த்து  மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் என்ன மாதிரியான விதி இது? மதத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று மாணவர்களுக்கு உத்தரவிட முடியுமா? அவர்களின் பெயர்களின் மதம் இல்லையா? அப்படியெனில் வெறும் நம்பர் வைத்து அவர்களை கூப்பிடுவீர்களா? 

கடந்த 2008 முதல் இந்த கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால் திடீரென்று இந்த மே மாதம்தான் உங்களுக்கு இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தோன்றியதா?” என கேள்வி எழுப்பினர்.

மேலும் இஸ்லாமிய பெண்கள் என்ன உடை அணிந்து வரவேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். அந்த சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இஸ்லாமிய பெண்களை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனச் சொல்வதுபோல் மற்ற பெண்களை பொட்டு வைக்கக் கூடாது, திலகம் வைக்கக் கூடாது என்று உங்களால் சொல்ல முடியுமா, அவற்றை உங்களால் தடை செய்ய முடியுமா? மத பேதமின்றி அனைத்து மாணவர்களும் இணைந்து பயில வழிவகை செய்ய வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள் கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளில் இதில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback