Breaking News

தமிழக அரசில் சமுதாய அமைப்பாளர் வேலை வாய்ப்பு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழக அரசில் சமுதாய அமைப்பாளர் வேலை வாய்ப்பு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது முழு விவரம்



தமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கம மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகிவுள்ளது. 

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி நிறுவனம் மூலம் (Outsourcing-HR Agency) பணி அமர்வு செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் நகர்ப்புர வாழ்வாதார மையத்தில் நேரடியாகவும், www.virudhunagar.nic.in என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நகர்ப்புர வாழ்வாதார மையத்தில் 05.09.2024 -தேதி மாலை 05:45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.


பணி:-

சமுதாய அமைப்பாளர்

பணியிடம்:-


சிவகாசி மாநகராட்சி

அருப்புக்கோட்டை நகராட்சி

இராஜபாளையம் நகராட்சி

விருதுநகர் நகராட்சி

திருவில்லிபுத்தூர் நகராட்சி

சேத்தூர் & செட்டியார்பட்டி பேரூராட்சிகள்


வயது வரம்பு :-

சமுதாய அமைப்பாளர் பதவிக்கு 05.08.2024ஆம் தேதியின் படி, அதிகபட்சமாக 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 


கல்வித்தகுதி : 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்

கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகளை (MS Office) பெற்றிருத்தல் கட்டாயமாகும். 

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

மகளிர் குழுக்கள் திட்டம் தொடர்பாக ஒரு வருட கால களப்பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பகுதி அளவிலான கூட்டமைப்பில் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராக உள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு:-

மேலாளர்
நகர்புற வாழ்வாதார மையம்m
ராஜபாளையம் 
தொலைப்பேசி எண் - 8344543852. 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

05.09.2024 மாலை 5.45 

மேலும் விவரங்களுக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க 

https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2024/08/2024082415.pdf

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback