Breaking News

மலையாள சினிமாத்துறையில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாககுற்றம் சாட்டிய ஹேமா கமிஷன் முழு விவரம்

அட்மின் மீடியா
0
கேரளாவில்  கடந்த 2017ஆம் ஆண்டு மலையாளம், தமிழில் நடித்த நடிகை ஒருவர், படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் போது நடிகர் திலீப் குமாரால் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நடிகர் திலீப் உட்பட் 9 பேர் திலீப் கைது செய்யப்பட்டார்கள்.

 



இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையாள சினிமாவில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாகவும் அவற்றை முன்னணி நடிகர்கள் சிலரே அரங்கேற்றுவதாகவும் நடிகைகள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரை விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு நபர் கமிஷனை கேரள அரசு நியமித்தது.

ஒய்வுபெற்ற நீதிபதி கே. ஹேமா கமிஷன் 6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அறிக்கை ஒன்றை தயார் செய்தது மேலும் அந்த குழுவின் அறிக்கையை கேரள முதல்வரிடம் கடந்த 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்துவிட்டது. ஆனாலும் அந்த அறிக்கையை கேரள அரசு வெளியிடாமல் இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த ரிப்போர்ட் நேற்று வெளியாகியுள்ளது

அதில் நீதிபதி ஹேமா கமிஷன் விசாரணையில் மலையாள திரையுலகில் நடைபெற்று வரும் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் இந்த அறிக்கை மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் சொல்லப்பட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தங்கள் அனுமதி இன்றி ஹோட்டல் அறைகளில் ஆண்கள் நுழைவார்கள் என்றும் காவல்துறையில் புகார் அளிக்க முற்பட்டால் சினிமாவில் தடை விதித்துவிடுவோம் என மிரட்டுவார்கள் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். 

திரைப்பட செட்டில் சுத்தமான கழிவறை மற்றும் உடை மாற்றும் அறை போன்ற அடிப்படை மனித உரிமைகள் கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன.

மாதவிடாய் காலங்களில் பெண் கலைஞர்கள் கடினமான சூழலை எதிர்கொள்கின்றனர். சிறுநீர் போகாமல் இருக்க நீண்ட காலத்திற்கு தண்ணீர் குடிக்காமல் இருப்போம் என கூறியுள்ளார்கள்

இந்த பாகுபாடுகள் நடிகைகளுக்கு மட்டுமில்லை, சிகை அலங்கார கலைஞர்கள், திரைக்கு பின்னால் பணியாற்றும் பெண்கள், உதவியாளர்கள், ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் ஆகியோருக்கும்தான். ஒரு முறை ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது. அதற்கு கழிப்பறைக்குச் செல்ல 10 நிமிடங்கள் ஆகும் என்பதால் அந்த கலைஞரை டாய்லெட்டுக்கு கூட அனுப்பாமல் தயாரிப்பு நிறுவனம் கொடூரம் செய்தது. 

ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் கேரவனில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த ஹீரோ, ஹீரோக்களுக்கு மட்டும் அனுமதிக்குமாம். மற்ற கலைஞர்கள் அதை பயன்படுத்த அனுமதி கிடையாதாம். இவ்வாறு ஹேமா ஆணைய அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றப்பின்னணி உள்ளவர்களை ஓட்டுநர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும். படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகைகளுக்கு பாதுகாப்பான இருப்பிடம் போக்குவரத்தைத் தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் மதுபானம், போதைப்பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என அந்த அறிக்கியில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback