Breaking News

பெற்றோர், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி முகாம் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

பெற்றோர், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி முகாம் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை

 

தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும் பெற்றோரின் அனுமதியும், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும் எனவும் அனுமதி இல்லாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது மேலும் அந்த அறிக்கையில் 

முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது எனவும்  மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் வழங்க வேண்டும் என  தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசி முகாமில் தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback