வெள்ளத்தின் குறுக்கே கயிறு கட்டி அந்தரத்தில் தொங்கி துணிச்சலாக மறுகரை சென்று பணி செய்த நர்ஸ் வீடியோ
வெள்ளத்தின் குறுக்கே கயிறு கட்டி அந்தரத்தில் தொங்கி துணிச்சலாக மறுகரை சென்று பணி செய்த நர்ஸ் வீடியோ
வயநாடு சூரல் மலையில் ஆற்று வெள்ளத்தின் நடுவே ஜிப் லைன் மூலம் துணிச்சலாக சென்று 35 பேரை கூடலூர் பெண் செவிலியர் காப்பாற்றியுள்ளார்.
சூரல் மலையில் கரைபுரண்டோடிய ஆற்றின் குறுக்கே ஜிப்லைன் அமைத்து காயமடைந்தோரை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, ஆற்றை கடந்து செல்ல ஆண் செவிலியிர் யாரும் இல்லாத போது, கூடலூரில் இருந்து வந்திருந்த சபீனா என்ற செவிலியர், உயிரை பணயம் வைத்து ஜிப் லைனில் சென்றார்.
அங்கு, காயமடைந்திருந்த 35 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
ஜிப் லைனில் சபீனா சென்ற வீடியோவை பகிர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர்...
உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்புப் பணியில் ஈடுபட்ட மற்றொருவர் செவிலியர் சபீனா. கூடலூரைச் சேர்ந்த சபீனா,வயநாடு சூரல் மலையில் ஆற்று வெள்ளத்தின் நடுவே ஜிப் லைன் மூலம் துணிச்சலாக சென்று 35 பேருக்கு முதலுதவி அளித்து அவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1819630281969881197
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ