Breaking News

நம் கட்சி கொடிக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கு - தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அளித்த தகவல் முழு விவரம்

அட்மின் மீடியா
0

நம் கட்சி கொடிக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கு -  தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அளித்த தகவல் முழு விவரம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சியின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும் கட்சியின் பாடலையும் இன்று அறிமுகம் செய்து வைத்தார். ப

னையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் இன்று காலை 9.25 மணிக்கு கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது. கொடியை அறிமுகம் செய்த பின்னர் அருகில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில், கட்சிக்கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து நிர்வாகிகள் முன்னிலையில் பேசிய தவெக தலைவர் விஜய் 

 


இன்று எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷமான நாள்.. என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கி, ஒரு தொடக்கப் புள்ளியாக கட்சியினுடைய பெயரை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தேன். அன்றைய தினத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட நாளுக்காக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்கு தெரியும்.

அது மாநில மாநாடு.. மாநில மாநாடுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் என்றைக்கு, எப்போது நடக்கும் என அறிவிக்கப்படும். அதற்கு முன்பாக எல்லோரும் கொண்டாடி மகிழ்வதற்காக கட்சியின் கொடியை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறேன். 

 


என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னிலையிலும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் முன்னிலையிலும் இந்த கட்சி கொடியை அறிமுகப்படுத்துவதில் பெருமையாக நினைக்கிறேன். 

இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். வரும் காலங்களில் நம்மை கட்சி ரீதியாக தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் அனைவரும் உழைப்போம். இந்த புயலுக்கு பின் அமைதி..ஆர்ப்பரிப்பு, ஆரவாரம் என்று இருப்பது போல் நம்முடைய கட்சி கொடிக்கு பின்னாலும் சுவாரஸ்யமான வரலாற்று பின்னணி ஒன்று உள்ளது.

அது என்னவென்று, நீங்கள் எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கும் மாநில மாநாட்டில் சொல்கிறோம். மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் அறிவிக்கும்போது கொடிக்கான விளக்கமும் அறிவிக்கப்படும். அதுவரை அனைவரும் சந்தோஷமாகவும், கெத்தாகவும் கட்சிக்கொடியை ஏற்றி கொண்டாடுவோம். 

 


இதை வெறும் கட்சிக்கான கொடியாக மற்றும் நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான ஒரு வெற்றிக் கொடியாக பார்க்கிறேன். 

இந்த கட்சி கொடியினை உங்களது இல்லத்திலும், உள்ளத்திலும் நான் சொல்லாமலே ஏற்றுவீர்கள் என எனக்கு தெரியும். ஆனாலும் முறையாக அனுமதி பெற்று, அனைவருடனும் தோழமை பாராட்டி கட்சிக்கொடியை ஏற்றி கொண்டாடவும். அதுவரை எல்லோரும் நம்பிக்கையுடன் இருங்கள்.. நல்லதே நடக்கும்,, வெற்றியை நிச்சயம்” என்று கூறினார்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback