Breaking News

டெல்லி விமான நிலையத்தில் வினேஷ் போகத்திற்க்கு உற்சாக வரவேற்பு வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

டெல்லி விமான நிலையத்தில் வினேஷ் போகத்திற்க்கு உற்சாக வரவேற்பு வைரல் வீடியோ


பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நடந்து முடிந்த பாரிஸ் ஒபிம்லிக்கில் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றிருந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நான்கு முறை உலக சாம்பியனும் , நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யுய் சுசாகியையும், காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஒக்சனா லிவாச்சியையும், அரையிறுயில் கியூபா வீராங்கனை யுஸ்னெலிஸ் குஸ்மனையும் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

உலகின் முன்னணி வீராங்கனைகள் 3 பேரை ஒரே நாளில் வீழ்த்தி பதக்க வாய்ப்பை உறுதி செய்திருந்த நிலையில், 100 கிராம் கூடுதல் எடையால் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அத்துடன் வினேஷுக்கு மல்யுத்த போட்டி விதிகளின்படி 50 கிலோ எடை பிரிவில் கூடுதல் எடை உள்ளதால் வெளிப்பதக்கம் கூட வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று டெல்லி திரும்பிய வினேஷ் போகத்திற்கு விமானநிலையத்தில் உறவினர்களும் சக வீரர்களும் கண்ணீர் மல்க மேல தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திறந்த வாகனத்தில் அழைத்து வரப்பட்ட வினேஷ் போகத்துக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் திரண்டு ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

 வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1824713236110795246

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback