Breaking News

பேருந்துகளில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது - காவல்துறை எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

பேருந்துகளில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது - காவல்துறை எச்சரிக்கை

 

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. சாதிய ரீதியிலான மோதல் மற்றும் இருதரப்பாக பிரிந்து மோதிக் கொள்வது என்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது

இந்நிலையில் பேருந்து நிலையங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றில் மாணவர்கள் இடையே நடைபெறும் மோதலை தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பாக திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் உடனான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல் கூட்டம் இன்று நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் பேருந்துகளில் ஜாதி ரீதியிலான பாடல்களை ஒலிக்க கூடாது என்றும், அது போன்ற பாடல்களை அழித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.இதனை மீறி சாதிய ரீதியான பாடல்கள் ஒலிக்க செய்தால் ஒட்டுநர், நடத்துநர் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback