Breaking News

தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் த.வெ.க கட்சித் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும்  த.வெ.க கட்சித் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தல்

                    

தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் ( BSP) சின்னமான யானை படத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது. உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவும் மற்றும் வழக்கும் தொடுக்கப்படும்.- தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தல்

தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை இன்று  நடிகர் விஜய் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில் அறிமுகம் செய்தார். கொடியில் இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை சட்டப்படி பயன்படுத்த முடியாது, யானை சின்னம் பயன்படுத்தியது தொடர்பாக பிஎஸ்பி தலைமையுடன் பேசிவருகிறோம், தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும், இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback