வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா!
அட்மின் மீடியா
0
வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா!இந்தியாவில் தஞ்சமடைய மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நோக்கி ஹெலிகாப்டர் மூலம் ஷேக் ஹசீனா பயணம் என தகவல் வெளியாகி உள்ளது
வங்கதேசத்தில் நடக்கும் தொடர் கலவரத்தால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டாக்கா அரண்மனையில் இருந்து ஷேக் ஹஸீனா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ஷேக் ஹஸீனா பதவி விலகக் கோரி நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தேசத்தின் முழுப் பொறுப்பையும் ராணுவம் ஏற்றுக்கொள்கிறது வங்க தேச மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ராணுவம் நிறைவேற்றும்
வங்கதேச ஜனாதிபதியிடன் சென்று இடைக்கால அரசை அமைக்க ராணுவம் உரிமை கோர உள்ளது வங்கதேச ராணுவத் தளபதி வேக்கர்-உஸ்-ஜமா அறிவிப்பு
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்