Breaking News

வங்கதேசத்தில் என்ன தான் நடக்குது போராட்டம் உருவானது எப்படி முழுவிவரம்

அட்மின் மீடியா
0

வங்கதேசத்தில் என்ன தான் நடக்குது போராட்டம் உருவானது எப்படி முழுவிவரம்



வங்கதேசத்தில் அரசு வேலைகளில் 1971ஆம் ஆண்டு வங்கதேசம் தனி நாடாக பிரிந்ததற்கான சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு 30 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் மீது, ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு கலவரம் மூண்டது. பல இடங்களில் வன்முறை வெடித்தது. வங்கதேசத்தில் ஏற்பட்ட இந்த கலவரம் மற்றும் வன்முறையால் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.


போராட்டம்:-

இதனையடுத்து இடஒதுக்கீட்டு சலுகையை 5% ஆக குறைத்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருந்தபோதிலும் பிரமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரியும், போராட்டத்தில் கைது செய்யபட்டவர்களை விடுவிக்கக்கோரியும் மீண்டும் கடந்த ஞாயிறு முதல் மீண்டும் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்

போராட்டகாரர்கள் ஷேக் ஹசீனா மாளிக்கைக்குள் சென்ற போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரத்திற்கு தீ வைத்தனர். மாளிகையில் உள்ள சமையல் அறைக்கு சென்று சமைத்து வைத்த உணவுகளை ருசி பார்த்தனர். 

அங்கிருந்து படுக்கையில் படுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். சிலர் ஷேக் ஹசீனா வரைந்து வைத்திருந்த போட்டோக்கள், அவருடைய சேலைகள் கண்ணில் பட்டதையெல்லாம் கொள்ளைடியத்தனர்.

பெரும்பாலான போராட்டக்காரர்கள் மாளிகை வளாகத்தில் வளர்க்கப்பட்ட வாத்து, முயல், கோழி போன்றவற்றை பிடித்துச் சென்றனர்.இதற்கிடையே வங்காளதேச சுதந்திரத்திற்கு முக்கிய காரணமாக இருந்த ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மான் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர்.

ராஜினாமா:-

போராட்டத்தையடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி அறிவித்துள்ளார்

வங்காளதேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 


ராணுவ ஆட்சி:-

தேசத்தின் முழுப் பொறுப்பையும் ராணுவம் ஏற்றுக்கொள்கிறது வங்க தேச மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ராணுவம் நிறைவேற்றும் வங்கதேச ஜனாதிபதியிடன் சென்று இடைக்கால அரசை அமைக்க ராணுவம் உரிமை கோர உள்ளது வங்கதேச ராணுவத் தளபதி வேக்கர்-உஸ்-ஜமா அறிவிப்பு

தொடர்ந்து அந்நாட்டு தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களிடம் உரையாற்றிய ராணுவ தளபதி வேகர் - உஜ் -ஜமன், இடைக்கால அரசு அமைக்கப்போவதாக அறிவித்தார். சலிமுல்லா கான் இடைக்கால அரசின் பிரதமராக செயல்படுவார் எனவும், ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகள் 10 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

போராட்டத்தை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களுக்கு வங்கதேச ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை ராணுவம் அறிவித்துள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் உடனடியாக போராட்டம் முடிவுக்கு வராவிட்டால், ராணுவம் களமிறங்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வங்கதேசத்தில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம் உருவாகியுள்ளது.

இந்தியாவில் தஞ்சம்:-

இந்தியா வந்தடைந்த ஷேக் ஹசீனாவை , ராணுவ அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.மேலும் வங்கதேச சூழல் குறித்தும், அந்நாட்டு பிரதமர் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலைமை கைமீறி சென்ற நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் தனது சகோதரியுடன் ராணுவ ஹெலிகாப்டர்மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளார். 

நிலமை:-

வங்கதேசத்திற்குச் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். 

வங்கதேசத்தில் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலகத்தை மூடுவதாக எல்ஐசி அறிவித்துள்ளது. 

வங்கதேசத்தில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து டாக்காவுக்கும், டாக்காவில் இருந்து இந்தியாவுக்கும் இயக்க திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா-வங்காளதேச எல்லை முழுவதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். எல்லை முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

 https://x.com/ali_naka/status/1820409642683654198

 போராட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

 https://x.com/zeyroxxie/status/1820430253543805315

 போராட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

 https://x.com/Aadhya__Sri/status/1820409969633644828/video/2

 போராட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/kanganaranautin/status/1820420538210136560/video/2 

 போராட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/doamuslims/status/1820411052749680651

 போராட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/ahmermkhan/status/1820396838182134111

 போராட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/basherkella/status/1820421783612260738

 போராட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback