Breaking News

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிலத்தை வழங்கும் கேரள தொழிலதிபர்!

அட்மின் மீடியா
0

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட நிலத்தை வழங்கும் கேரள தொழிலதிபர்!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட இரு பெரும் நிலச்சரிவுகள் நாட்டையே உலுக்கியுள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வந்த முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி உள்ளிட்ட மலை கிராமங்கள் மொத்தமாக மண்ணில் புதைந்தன.மேலும் பலர் பாதிப்படைந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்

இந்நிலையில் தனக்கு சொந்தமாக இருக்கும் 1000 ஏக்கர் நிலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் 100 வீடுகளை கட்டி கொள்ள நிலம் வழங்குவதாக கூறியுள்ளார் தொழிலதிபர் பாபி செம்மனூர். 

காலம் முழுக்க உழைத்து வீட்டை கட்டியவர்கள் இந்த நிலச்சரிவில் அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு என் நிலத்தில் இருந்து 100 வீடுகள் கட்டிக்கொள்ள நிலத்தையும் வழங்க இருக்கிறேன். இது தொடர்பாக அமைச்சர்களிடமும் பேசியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தயார் செய்து சரியானவர்களுக்கு நிலம் வழங்கப்படும். மேலும், வீடு கட்டுவதற்கும் உதவ இருக்கிறோம். மீட்பு பணிகள் முடிந்த பிறகு கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது 

பலருடைய பாராட்டை பெற்றுள்ளது. மேலும், இது குறித்து பேசியுள்ள பாபி செம்மனூர், வீடுகளை கட்ட 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றவர் கூடுதலாக தேவைப்பட்டால் அதனையும் வழங்க தயார் என்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தின் திருச்சூரைச் சேர்ந்த பாபி செம்மனூர் ஜூவல்லர்ஸின் நிறுவனர் தொழிலதிபர் பாபி செம்மனூர்டாக்டர் பட்டம் பெற்றவரான இவர் தனது அறக்கட்டளை மூலமாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback