Breaking News

செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பால் மரணம் அடைந்த காங்கிரஸ் நிர்வாகி அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0
செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த போதே மாரடைப்பால் மரணம் அடைந்த காங்கிரஸ் நிர்வாகி அதிர்ச்சி வீடியோ

பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்கிய ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது 63 வயதான காங்கிரஸ் கட்சி ஊழியரும், கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்கத்தின் உறுப்பினருமான சி.கே.ரவிச்சந்திரன் மாரடைப்பால் இறந்தார்.




ரவிச்சந்திரன் மற்ற உறுப்பினர்களுடன் பத்திரிகையாளர் சந்திப்பு அரங்கிற்குள் நுழைந்தார். மதியம் 12.45 மணிக்கு, அமர்ந்திருந்த ரவிச்சந்திரன், முதல்வருக்கு எதிரான ஆளுநரின் நடவடிக்கை குறித்து மைக்கைப் பிடித்து பேசினார். ஆனால், சில நொடிகளில் மடியில் இருந்த மொபைல் போன் தவறி கீழே விழுந்தது.ஆரம்பத்தில் அவன் போனை எடுக்கப் முயற்சி செய்தார்  இருப்பினும், அவர் சரிந்து கீழே விழுந்தார், உடனடியாக அவரை கன்னிங்ஹாம் சாலையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது மறைவுக்கு முதல்வர் சித்தராமையா  “அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றும் போராட்டத்தில் எங்களுடன் இருந்த ரவிச்சந்திரனின் மறைவு வேதனை அளிக்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.” என இரங்கல் தெரிவித்துள்ளதாவது,

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1825747647623475473

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback