Breaking News

மதுரை மாநகராட்சி வேலை வாய்ப்பு பட்டபடிப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0
மதுரை மாநகராட்சி வேலை வாய்ப்பு பட்டபடிப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ

மதுரை மாவட்டம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலகத்தில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களில் ஒப்பந்த முறையில் வெளிகொணர்வு மனித வள நிறுவனங்கள் (Outsourcing HR Agency) மூலம் பணி அமர்வு செய்திட தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை madurai.nic.in என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மேலும் தங்கள் பகுதிக்கு சம்பந்தப்பட்ட நகர வாழ்வாதார மையங்களில் நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இவ்வலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மனித வள நிறுவனங்களான (HR Agency) தங்கள் பகுதிக்கு சம்பந்தப்பட்ட நகர வாழ்வாதார மையங்கள் மற்றும் மக்கள் கற்றல் மையம் அலுவகலத்தில் 30.08.2024 தேதி மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.




கல்வித் தகுதி:-

ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் மற்றும் கணிணி இயக்கத்தில் அடிப்படை தகுதிகள் (MS Office) பெற்றிருத்தல் வேண்டும், 

தகவல் தொடர்பில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். 

வயதுவரம்பு:-

30.08.2024 தேதி அன்று 35 வயதிற்க்கு உட்பட்டு இருக்க வேண்டும் 

இதர தகுதிகள்:-

மகளிர் திட்டம் போன்ற கள தலையீடுகள் தேவைப்படும் திட்டங்களில் குறைந்த பட்சம் ஒருவருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

கணிணி இயக்கும் திறன் பெற்றிருப்பது கட்டாயமாகும். ALF ல் உறுப்பினராக இருக்க வேண்டும். 

சம்பந்தப்பட்ட ALF பரிந்துரை கடிதம் அல்லது தீர்மான நகல் இணைக்கப்பட வேண்டும். தகவல் தொடர்பில் திறன் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

இரண்டு வருடங்கள் முடிவடைந்த ALF ல் உறுப்பினராக இருப்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

இதற்கு முன் TNSRLM/ புதுவாழ்வு திட்டம் / IFAD போன்ற அலுவலகங்களில் நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது. 

ஒட்டுமொத்த மாத ஊதியம் (Consolidated Remuneration) ரூ.16000. பணி ஏற்ற நாளிலிருந்து ஒரு வருட காலம் பணி நிறைவு செய்த பின் அடிப்படை ஊதியத்தில் 3% வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கப்படும்.

விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2024/08/2024082078.pdf

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

30.08.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2024/08/2024082030.pdf


உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback