Breaking News

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா - இஸ்ரேல், லெபனானில் போர் பதற்றம்!

அட்மின் மீடியா
0

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா - இஸ்ரேல், லெபனானில் போர் பதற்றம்!

 இஸ்ரேல் மீது பெரிய அளவிலான தாக்குதல் நடத்த உள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவிப்பு; ஹிஸ்புல்லாவை ஒழிக்கும் நடவடிக்கையில் முனைப்புடன் செயல்படுவோம் என இஸ்ரேல் சூளுரை


 

கடந்த மாதம் பெய்ரூட்டில் உயர்மட்ட தளபதி புவாட் ஷுக்ர்(Fuad Shukr) கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் முகமாக இன்று (25) ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலை நோக்கி 320க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா(Hezbollah) அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனானிலுள்ள அந்த அமைப்பின் இலக்குகள் மீது விமான தாக்குதலை நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லாவின் தளங்கள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து லெபனான் குடிமக்கள் உடனடியாக வெளியேறவேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் இஸ்மாயில் ஹனியே தலைமையிலான ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக செயல்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், வடக்கு இஸ்ரேல் மீது நேற்று நள்ளிரவு முதல் ஹில்புல்லா படையினர், ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, லெபனானுக்கு எதிராக இஸ்ரேலிய ராணுவம் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியுள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback