Breaking News

மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் மீது நடிகை நமீதா பரபரப்பு புகார் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர்- நடிகை நமீதா பரபரப்பு புகார் நடந்தது என்ன முழு விவரம்

பாஜக செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான நமிதா தனது கணவருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய சென்ற போது கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர் என நடிகை நமீதா வீடியோ வெளியிட்டு புகார் கூறியுள்ளார்.



கோவிலில் இருந்த அதிகாரி ஒருவர் உங்களுடைய மதம் என்ன, எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று கேள்வி எழுப்பியதாக புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருந்தேன். அப்போது பெண் அதிகாரி ஒருவர் தன்னிடம் உங்களுடைய மதம் என்ன, எந்த வகுப்பை சேர்ந்தவர் என்று கேட்டார். கோவில் நிர்வாகம் தன்னிடம் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டனர்.தான் இந்து மதத்தை சேர்ந்தவள். என் திருமணம் திருப்பதியில் நடந்தது. என் குழந்தைக்கு கூட கிருஷ்ணனின் பெயர் தான் வைத்துள்ளேன். 

கோவில்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பது என்பது வருத்தமாக உள்ளது.இந்தியாவில் எந்த கோவிலிலும் தன்னிடம் இந்த கேள்வியை கேட்டதில்லை.மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். அமைச்சர் சேகர்பாபுவிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

முக்கியமான பிரபலங்கள், வெளிநாட்டினர் வரும்போது இந்துவா என விசாரிப்பது வழக்கமான நடைமுறை; இந்துக்கள் அல்லாதோருக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை என அறிவிப்புப் பலகை உள்ளது - மீனாட்சி அம்மன் கோயில் தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback