Breaking News

டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை? முழு விவரம்

அட்மின் மீடியா
0

டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை? முழு விவரம்

பல குற்றச் செயல்கள் நடக்க டெலிகிராம் செயலி பயன்படுவதால் இந்தியாவில் தடை விதிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் டெலிகிராம் செயலி மூலம் ஏதேனும் குற்றச் செயல்கள் நடந்துள்ளதா என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் விசாரிக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




டெலகிராம் ஆப் பல குற்ற நடவடிக்கைகளை அனுமதிப்பதாகவும், விதிகளுக்கு ஒத்துழைக்காதது போன்ற குற்றச்சாட்டுகளில் அந்நிறுவன சி.இ.ஓ. பாவெல் துரோவ் பிரான்ஸ் அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் டெலிகிராம் பற்றி புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதா?   என்பது குறித்து உள்துறை அமைச்சகத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இந்தியாவில் டெலிகிராம் அலுவலகம் இல்லாததால் சிரமங்கள் எழுந்துள்ளன. இது நிறுவனத்துடனான நேரடியான தகவல் தொடர்புகளை சிக்கலாக்குகிறது மற்றும் பயனர் தரவைக் கோருவதற்கான முயற்சிகளைத் தடுக்கிறது என்றும் இது விசாரணையை மிகவும் சிக்கலாக்குகின்றது என கூறப்படுகின்றது.

இந்த விசாரணையின் முடிவைப் பொறுத்து, இந்தியாவில் டெலிகிராம் தடைசெய்யப்படுமா என முடிவு வெளியாகும்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback