விளையாட்டு போட்டியில் தோல்வியடைந்த மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தையில் திட்டிய உடற்கல்வி ஆசிரியர் வீடியோ
அட்மின் மீடியா
0
கால்பந்து போட்டியில் தோல்வியடைந்த பள்ளி மாணவர்களை சக மாணவர்கள் முன்னிலையில் ஷூ காலால் எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தையில் திட்டிய உடற்கல்வி ஆசிரியர் வீடியோ
சேலம் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு இடையே கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இதில் அம்மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே இருக்கும் கொளத்தூரில் செயல்படும் பிரபல அரசு உதவி பெறும் பள்ளி போட்டியில் வெற்றி பெறவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர். மாணவர்களை தரையில் அமர வைத்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், ஷூ காலால் எட்டி உதைத்துள்ளார். மேலும் அனைவரது முன்னிலையிலும் உட்கார வைத்து தலைமுடியை பிடித்து தாக்கத் தொடங்கினார். தொடர்ந்து தனது ஷூ காலால் எட்டி உதைத்து கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்தார்.ஏற்கனவே போட்டியில் தோற்ற வருத்தத்தில் இருந்த மாணவர்கள் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
சேலம் மாவட்டத்தில் போட்டியில் தோற்ற மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ