Breaking News

சென்னையில் இருந்து வேளாங்கண்ணி செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா வரும் ஆகஸ்ட் 29 தேதி தொடங்க உள்ளதையொட்டி ஆகஸ்ட் 28ம் தேதி தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்தும், கோவாவில் இருந்தும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு முழு விவரம்

ஆகஸ்ட் 28ம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், ஆகஸ்ட் 29ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் வேளாங்கண்ணிக்கு சென்றடையும். 

மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் புறப்பட்டு காலை 8.30க்கு தாம்பரம் வந்தடையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா சிறப்பு ரயில்:-

ஆகஸ்ட் 27, செப்டம்பா் 2 மற்றும் 6-ஆம் தேதிகளில் கோவாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு விழாக்கால சிறப்பு ரயில் (07361) இயக்கப்படுகிறது

மறுமாா்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 29, செப்டம்பா் 4 மற்றும் 8-ஆம் தேதிகளில் கோவாவிற்கு சிறப்பு விரைவு ரயில் (07362) இயக்கப்படும். 

கோவாவில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் ரயில் மூன்றாம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும். இதேபோன்று, 

வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் மூன்றாம் நாள் அதிகாலை 12.15 மணிக்கு கோவாவிற்கு சென்றடையும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்த ரயில் நாகை, திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், பெங்களூரு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback