Breaking News

தமிழக அரசின் முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
தமிழக அரசின் முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின் முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களைத் தொகுத்து செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக 25 பேர் முதலமைச்சர் பெல்லோஷிப் திட்டத்தில் (Tamilnadu Chief Minister's Fellowship programme - 2024-26) பணியமர்த்தப்பட உள்ளார்கள். 




கல்வித் தகுதி:-

தொழிற்கல்விப் படிப்புகளில் இளங்கலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி 

(பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை அறிவியல்) அல்லது கலை / அறிவியலில் முதுகலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி. 

தமிழ்மொழி பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது.

வயது வரம்பு:-

26.08.2024 அன்று 22 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

எஸ்.சி/எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், பி.சி/ எம்.பி.சி பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

உதவித்தொகை:-

ரூ. 65,000 + 10,000 

விண்ணப்பிக்கும் முறை: 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tn.gov.in/tncmfp/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

26.08.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.tn.gov.in/tncmfp/

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback